திருப்பூர் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி- மு.க.ஸ்டாலின்

 
mkstalin

திருப்பூர்‌ மாவட்டம்‌, தாராபுரம்‌ சாலை விபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு ஆறுதல்‌ தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவி அறிவித்துள்ளார். 

DMK poll promises have been fulfilled: MK Stalin - The South First

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர்‌ மாவட்டம்‌, தாராபுரம்‌ வட்டம்‌, மணக்கடவு கிராமம்‌, ஆலங்காட்டுப்பிரிவு என்ற இடத்தில்‌ இன்று (16.41.2023) மாலை டேங்கர்‌ லாரியும்‌, நான்கு சக்கர வானமும்‌ நேருக்குநேர்‌ எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில்‌ நான்கு சக்கர வாகனத்தில்‌ பயணம்‌ செய்த தாராபுரத்தைச்‌ சேர்ந்த திரு.பாலகிருஷ்ணன்‌ (வயது 65), அவரது மனைவி திருமதி.செல்வி (வயது 50), கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, பெரியநாயக்கன்பாளையம்‌, வஞ்சியம்மா நகரைச்‌ சேர்ந்த திரு.தமிழ்மணி (வயது 50), அவரது மனைவி திருமதி.சித்ரா (வயது 45) ஆகிய நால்வரும்‌ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்‌ மேலும்‌ திண்டுக்கல்லைச்‌ சேர்ந்த திருமதி.கலாராணி (வயது 55) என்பவர்‌ தாராபுரம்‌ அரசு மருத்துவமனையில்‌ உயிரிழந்தார்‌ எண்ற துயரமாண செய்தியினைக்‌ கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்‌.

Keep a tab on financial firms: CM- The New Indian Express


இவ்விபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கும்‌ அவர்களது. உறவினர்களுக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, ஆறுதலையும்‌ தெரிவித்துக்‌ கொள்வதோடு உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம்‌ ரூபாய்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.