தென்காசி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி

 
mkstalin

தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி கிராமம், மஜரா புன்னையாபுரம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவி அளித்துள்ளார்.

accident1

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், சொக்கம்பட்டி கிராமம், மஜரா புன்னையாபுரத்தில் உள்ள பெரியபாலம் அருகில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று (28.1.2024) அதிகாலை சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும், கார் ஒன்றும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், புளியங்குடி கிராமம், பகவதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த திரு.போத்திராஜ் (வயது 32) த/பெ. மூக்கையா கோனார், திரு.வேல்மனோஜ் (வயது 30) த/பெ.கோபால், திரு.சுப்பிரமணியன் (வயது 29) த/பெ.பரமசிவன், திரு.கார்த்திக் (வயது 24) த/பெ.பட்டமுத்து, திரு.முத்தமிழ்செல்வன் (வயது 23) த/பெ.ராமமூர்த்தி, திரு.மனோ (வயது 19) த/பெ.மாரிச்சாமி ஆகிய 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். 

Raise Manipur, CAG report in Parliament: Stalin to MPs


இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.