வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்...ஆண்களை விட பெண்களே அதிகம்!
Jan 6, 2025, 12:30 IST1736146815000
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது.
தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே தமிழகத்தில் அதிகம் உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 3 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரத்து 803 பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 027 பேர் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 9 ஆயிரத்து 120 பேர் உள்ளனர்.
அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 6 லட்சத்து 91 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதேபோல் தமிழகத்தில் குறைந்த பட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.