மே 2-இல் திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம்
இழப்பை ஏற்காத நடிகர்களை கண்டித்து மே 2ம் தேதி திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.

வரும் காலங்களில் வருவாய் பகிர்வு அடிப்படையில் மட்டுமே திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தி வரும் மே 2ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்ய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு பிறகு நடக்கும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திலேயே, அடையாள வேலை நிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படும்போது பிரச்சனைகள் குறித்து நடிகர்கள் பேசுவதில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் ஆந்திராவில் உள்ளதுபோன்று தமிழ்நாட்டிலும் தயாரிப்பாளர்களின் லாப, நஷ்டத்தில் நடிகர்கள் பங்குக்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பெரிய பட்ஜெட் படங்கள் இனி வருவாய் பகிர்வு அடிப்படையிலேயே தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

