அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பமனு தாக்கல் மீண்டும் தொடக்கம்
தமிழ்நாட்டில் 2026 ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கான இரண்டாம் கட்ட விருப்பமனு விநியோகம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள்,தங்களது விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று கடந்த 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி 15ஆம் தேதி தொடங்கிய விருப்பமனு வினியோகம் 23ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், விருப்ப மனுக்களை பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தருமாறு நிர்வாகிகளும், தொண்டர்களும் வேண்டுகோள் விடுத்ததை ஏற்று, இன்று முதல் வருகிற 31ம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என அதிமுக தலைமை கழகம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.அதன்படி இன்று காலை 10 மணி முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்கி நடைபெற்று வருகிறது.


