சென்னை முழுக்க பரவும் காய்ச்சல்- மருத்துவமனைகளில் குவியும் மக்கள்
Sep 13, 2026, 11:22 IST1789278764869
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவருகிறது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவருகிறது. சென்னை, புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களில் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 140 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அடையாறு, அண்ணாநகர், வளசரவாக்கத்தில் காய்ச்சல் பாதிப்ப் அதிகமாக உள்ளது. இன்ப்ளூயன்சா ஏ, ரைனோ வைரஸ், ஆர்எஸ்வி உள்ளிட்ட வைரஸ்கள் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யவும் அறிவுரை வழங்குகின்றனர். 3,700க்கும் மேற்பட்ட கள பணியாளர்கள் மூலம் வீடு வீடாக கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி தரப்பு தெரிவித்துள்ளது.

