திருமணமான ஒரே மாதத்தில் பெண் ஐடி ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

 
suicide

பட்டாபிராமில் திருமணமான ஒரே மாதத்தில் பெண் ஐடி ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

suicide


ஆவடி அடுத்த பட்டாபிராம் சத்திரம் பகுதியை சேர்ந்த பிரபு (50) கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். அவரது மூத்த மகள் சந்தியா (25) கடந்த பிப்ரவரி 22ம் தேதி முகப்பேர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (30) தனியார் வங்கியில் பணிபுரியும் நபருக்கு பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்தனர். கடந்த சனிக்கிழமை கார்த்திக் வீட்டில் இருந்து தாய் வீட்டிற்கு சந்தியா வந்தார்  மதியம் மார்க்கெட் சென்று வருவதாக கூறி நீண்ட நேரம் ஆகியும் சந்தியா வராததால் பெற்றோர்கள் தேடி வந்தனர். பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே சென்னையில் இருந்து  பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயிலில் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

ரயில் நிலையத்தில் இருக்கும் பொதுமக்கள் ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்தபோது சந்தியா என்பது தெரிய வந்தது அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து சந்தியாவை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆவடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தியாவின் தற்கொலைக்கான காரணங்களை தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர் இவ்வழக்கை ஆர்டிஓ அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.