பெண் தாதா - உளவுத்துறை காவலர் ஆபாச பேச்சு! வைரலாகும் ஆடியோ

 
au


பெண் தாதாவுடன் உளவுத்துறை காவலர் மாதவன் ஆபாசமாக பேசும் ஆடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

ff

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம் அடுத்த எட்டையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்.  திமுக வார்டு உறுப்பினரான  இவர் முன்விரோதம் காரணமாக சில மாதங்களுக்கு முன்பதாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.   இந்த கொலை வழக்கில் திமுக ஒன்றிய பிரதநிதிகளான எஸ்தர் என்கிற யோகேஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார் . தற்போது அவர்  ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் .

இந்த நிலையில்,   தாம்பரம் காவல் ஆணையரங்கத்திற்கு உட்பட்ட சோமங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த உளவுத்துறை காவலர் மாதவன் எஸ்தருடன் செல்போனில் ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.   இன்னொரு ரவுடி சச்சின் என்பவரை பற்றி இருவரும் பேசிக் கொள்வதாக அமைந்து இருக்கிறது அந்த ஆடியோ. 

 அந்த ஆடியோ உரையாடல் அந்தரங்கமாகும் ஆபாசமாகவும் முடிக்கப்பட்டு இருக்கிறது.   ஆடியோ ஒளியாகி விட்டதால் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.