பெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

 
tn

காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த யூடியூபர் சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதுதொடர்பாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.

1

இருப்பினும் அவருக்கு ஜாமீன் வழங்காத நிலையில் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லிக்கு தப்பி சென்றார்.  கடந்த 10 ஆம்‌ தேதி இரவு டெல்லியில் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் பெலிக்ஸ் ஜெரால்டு-ஐ கைது செய்தனர். அவரை வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார். இதை தொடர்ந்து யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

tn

இந்நிலையில் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டதால் முன்ஜாமீன் மனு காலாவதி ஆகிவிட்டதாக கூறி முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.   ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டதாக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.