“இது என்னடா புதுசா இருக்கு?”- வீடுகளில் ஆடு, மாடு, நாய் வளர்க்க கட்டணம் விதிப்பு

 
நாய்

வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிக்க மதுரை மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி மாமன்றத்தின் 36 மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி பொன்.வசந்த் தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், மண்டலத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர், மேலும்,சிறப்பு விருந்தினராக மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், அதிமுக முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜு சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். மாமன்ற கூட்டத்தில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் 7 வகையான 201 சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான உரிம கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளன, உரிம கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், உயர்த்தப்பட்ட உரிம கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். 

மேலும் வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க 150 ரூபாயும், மாடு வளர்க்க 500 ரூபாயும், குதிரை வளர்க்க 750 ரூபாயும், ஆடு வளர்க்க 150 ரூபாயும், பன்றி வளர்க்க 500 ரூபாயும், நாய், பூனை வளர்க்க 750 ரூபாயும் உரிம கட்டணங்கள் நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.