சென்னையில் மனமகிழ் மன்றம் தொடங்க கட்டணம் இருமடங்காக உயர்வு..!!
Jun 29, 2026, 09:29 IST1782705562498
தமிழ்நாடு அரசு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள், 1981ல் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தங்கள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மனமகிழ் மன்றம் தொடங்க ரூ.15 லட்சமாக இருந்த சிறப்புக் கட்டணத்தை ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மதுபான உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.10,000 உரிமக் கட்டணம் ரூ.30,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை தவிர மற்ற மாநகராட்சிகளில் மனமகிழ் மன்றங்கள் தொடங்க ரூ.25 லட்சம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகராட்சிகளில் மனமகிழ் மன்றங்கள் தொடங்க ரூ.15 லட்சம், மற்ற இடங்களில் ரூ.10 லட்சம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கு குறைவான மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் என நிர்ணயம் அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

