பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

 
rape

நிலக்கோட்டை  அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

rape

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள அம்மையநாயக்கனூர்  காவல்நிலையத்திற்கு  உட்பட்ட அம்மாபட்டியைச் சேர்ந்த ஜெயசீலன் (வயது 45). இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவருக்கு திண்டுக்கல் அருகே உள்ள முத்தழகுபட்டியைச் சேர்ந்த  சோபனா ராணி (வயது 37) என்பவருடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும், ஒரு 12 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் ஜெயசீலனுக்கும், அவரது மனைவி ஷோபனா ராணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக தந்தை வீட்டிற்கு சோபனா ராணி கோபித்துக் கொண்டு சென்று விட்டதாக  தெரிகிறது. இவர்களிர் மூத்த மகன் திண்டுக்கல்லில் ஒரு தனியார் பள்ளியில் படித்து வருவதால் பள்ளி முடிந்ததும் அம்மா வீட்டிற்கு  சென்று விடுவார்.  இளைய மகனும், மகளும் அம்மாபட்டியில் படிப்பதால் இருவரும் தந்தையுடன் இருந்துள்ளனர். சனி, ஞாயிறு மட்டும் அம்மாவை பார்க்க முத்தழுபட்டிக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை மீண்டும் அம்மாபட்டிக்கு பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை ஜெயசீலனின்  இளைய மகனும்,  மகளும் அம்மாவிடம் சென்றுவிட்டு இன்று திங்கள்கிழமை  காலையில் பள்ளிக்கு அம்மாபட்டிக்கு போக சொல்லி தாய் ஷோபனா கூறியுள்ளார். இதில் பெண் குழந்தை மட்டும் அம்மாபட்டிக்கு போக மறுத்து அழுதுள்ளார்.  தாய் ஷோபனா காரணம் கேட்ட போது தந்தை ஜெயசீலன் பாலியல் தொந்தரவு செய்வதாகவும், அதனால்  போக மாட்டேன் எனவும் கூறியதை அடுத்து ஷோபனா, 1098-என்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு ஹெல்ப் லைனுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர்கள் மாவட்ட சமூகநல அலுவருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்க்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அம்மாபட்டியில் இருந்த முன்னாள் இராணுவ வீரரான ஜெசீலனை காவல்துறையினர்  போக்சோ சட்டத்தில் கைது செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.பெற்ற மகளையே பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.