8 மாத குழந்தைக்கு விஷம் கொடுத்த தந்தை - சங்கரன்கோவிலில் கொடூரம்

8 மாத குழந்தைக்கு விஷம் கொடுத்த தந்தையின் செயல் சங்கரன்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் பெரும்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (37). அவரது மனைவி அன்னை முருகேஸ்வரி குழந்தைகளுடன் ஒன்றாக வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் வாக்குவாதம் சண்டையும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது மகள் எட்டு மாத குழந்தைக்கு குழந்தையின் அப்பாவான முத்துக்குமார் மனைவியையும், குழந்தையும் கொல்லப் போவதாக விஷத்தை எடுத்து வந்ததாகவும் அதைக் கொடுக்க முயற்சித்த போது மனைவி அன்னை முருகேஸ்வரி தடுத்து தட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு குழந்தையுடன் வந்த அன்னை முருகேஸ்வரி உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய மருத்துவரை அணுகினார்.
இந்நிலையில் அன்னை முருகேஸ்வரியின் அப்பா கருணாநிதி இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், முத்துக்குமாருக்கு வேறொரு பெண்ணிடம் தொடர்பு இருக்கிறது. இதனால் என் மகள் அன்னை முருகேஸ்வரியிடம்அடிக்கடி சண்டையிடுகிறார். இதனால் பிள்ளையை தருமாறு அவர்களிடம் நாங்கள் கேட்டோம். ஆனால் தராமல் மகளுக்கும் குழந்தைக்கும் விஷம் கொடுக்க முயற்சித்ததாக கூறினார்.
எட்டு மாத குழந்தைக்கு விஷம் கொடுக்க முயன்றதாக கரிவலம் வந்த நல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சந்திரன் கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.