மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கொலை செய்த தந்தை

 
murder

திருச்சி செந்தண்ணீர்புரத்தை சேர்ந்தவர் அற்புதராஜ் (56) இவருக்கு வில்சன் ஆண்ட்ரூஸ்(33) என்கிற மகன் உள்ளார். வில்சன் எந்த வேலைக்கும் செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். இவர் மது அருந்த அடிக்கடி அவர் தந்தையிடம்  பணம் கேட்டு தகராறில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. நேற்றும் அது போல அவர் மது அருந்த பணம் கேட்டு தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

muder d - Amrit Vichar

இதனால் ஆத்திரமடைந்த அவருடைய தந்தை அற்புதராஜ் வில்சன் ஆண்ட்ரூஸ்ஸின் கை, கால்களை கட்டி கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தியும் வில்சனை கொலை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வில்சன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து அற்புதராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை மகனையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.