“மகனை பறிகொடுத்துவிட்டேன்”- விஜயை காண வந்த தந்தைக்கு அனுமதி மறுப்பு
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஈரோடை சேர்ந்த மோகன் (19) என்பவரின் தந்தை கந்தசாமியை உள்ள அனுமதித்காததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்திக்க உள்ளார். இந்த நிலையில் நேற்று கரூரில் இருந்து புறப்பட்ட உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நேற்றிரவு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைத்துள்ளனர். இன்று விஜய் நேரில் வந்து உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் மாமல்லபுரம் நட்சத்திர உணவக வளாகத்தில் ஏராளமான பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு பகுதியில் இருந்து தமிழக வெற்றிக கழக நிர்வாகிகள் மாமல்லபுரம் வருகை தந்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிழந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மோகன் (19) என்பவரின் தந்தை கந்தசாமியை உள்ளே அனுமதிக்கததால் கந்தசாமி மாமல்லபுரம் நட்சத்திர உணவக வளாகத்தில் காத்திருந்தார். இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள தவெக தலைமை, “உள்ளே அனுமதிக்கவில்லை என கூறும் கந்தசாமி என்ற நபரும் உயிரிழந்த மோகனின் தாயாரும் பல ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்கின்றனர். உயிரிழந்த மோகன் அவரது தாயாருடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் தவெக வழங்கிய ரூ.20 லட்சம் தாயாரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தாயார் மட்டும் ஆறுதல் தெரிவிக்கும், நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


