மகள் காணாமல் போன விரக்தியில் தந்தை தூக்கிட்டு தற்கொலை

 
 suicide

குன்றத்தூர் அருகே மகள் காணாமல் போன விரக்தியில் தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

31 children died by suicide every day in 2020, reveals govt data; experts  blame Covid-19 | Latest News India - Hindustan Times

குன்றத்தூர் அடுத்த கொல்லசேரி, காந்தி தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(42), டிரைவராக வேலை செய்து வந்தார்.  இரவு அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் அவரது குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது பிரகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன பிரகாஷ் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சில தினங்களுக்கு முன்பு பிரகாஷ் மகள் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் காணாமல் போனதாகவும், அது முதல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த பிரகாஷ் தற்கொலை செய்துகொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரது தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.