அதிமுக எம்எல்ஏக்கள் சார்பில் இன்று உண்ணாவிரதம் போராட்டம்

 
tt

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்  மேற்கொள்கின்றனர். நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர்.

tt
இதுதொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் , திரு. எஸ்.பி. வேலுமணி, எதிர்கட்சி சட்டமன்ற கொறடா (அஇஅதிமுக), அவரது 26.06.2024 நாளிட்ட மனுவில் குறிப்பிட்டுள்ள காரணத்திற்காக அக்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், 27.06.2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை, சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார்.
 மனுதாரரின் மனுமுறைப்படி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ff

மனுதாரர் 27-06-2024 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை, சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் - காவல் உதவி ஆணையாளர் குறிப்பிடும் இடத்தில் குழுமி - மனுதாரர் தனது மனுவில் கோரியது போல் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டு போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறும் செய்யாமல் - சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடாமல் - கீழே குறிப்பிடப்பட்டுள்ள வரையறைகளின்படி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணிக்குள் முடிக்கப்படவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் நீடித்தல் கூடாது. உண்ணாவிரதப் போராட்டம் முடிந்தவுடன் கலந்து கொண்டவர்கள் அமைதியாக கலைந்து செல்லவேண்டும். காவல்துறையின் வரையறைகளை மீறினால் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.