சுங்கச்சாவடி கழிப்பறை புகார் அளித்தால் ரூ.1,000 ஃபாஸ்டேக் ரீசார்ஜ் கிடைக்கும்..

 
1

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 'கிளீன் டாய்லெட் பிக்சர் சேலஞ்ச்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், சுங்கச்சாவடிகளில் உள்ள கழிப்பறைகள் அசுத்தமாகவோ அல்லது முறையாக பராமரிக்கப்படாமலோ இருந்தால், அதனை புகைப்படம் எடுத்து புகாரளிக்கும் பயணிகளுக்கு ரூ.1,000 மதிப்புள்ள இலவச ஃபாஸ்டேக் ரீசார்ஜ் பரிசாக வழங்கப்படுகிறது. இத்திட்டம் வரும் ஜூன், 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி தூய்மையை உறுதி செய்வதோடு இலவச ரீசார்ஜையும் வெல்ல முடியும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் மக்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் clean toilet picture india challenge என்ற திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் சுங்கச்சாவடிகளில் கழிப்பறைகள் சுத்தமில்லாமல் இருப்பது அறிந்தால் அதனை புகைப்படமாக எடுத்து அனுப்ப வேண்டும் இவ்வாறு நீங்கள் அசுத்தமான கழிப்பறைகளை எடுத்து புகைப்படம் அனுப்பும்போது உங்களுடைய ஃபாஸ்டேக் கணக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 1000 ரூபாய் ரீசார்ஜ் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு சுமார் 300க்கும் அதிகமானவர்கள் 1000 ரூபாய் இலவச ரீசாஜ் பெற்றனர். இந்த ஆண்டும் ஜூன் மாதம் வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. பயணிகள் இந்த சலுகையை பெறுவதற்கு Rajmargyatra என்ற செயலியை தங்களுடைய போனில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

அசுத்தமான சுங்கசாவடி கழிப்பறையை தெளிவாக படம் எடுத்து இந்த ஆப்பில் உள்ள ஜியோ டேக் செய்யப்பட்ட தகவலோடு பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனை அடுத்து உங்களுடைய பெயர் ,இடம், வாகன பதிவு எண், மொபைல் எண் ஆகிய விவரங்களையும் உள்ளிட வேண்டும். ஒரே கழிப்பறை குறித்து பலர் புகார் அளித்தாலும் முதலில் யார் புகார் அளித்தாரோ அவருக்கு தான் இந்த 1000 ரூபாய் ரீசார்ஜ் கிடைக்கும் . போலியான மற்றும் பழைய புகைப்படங்கள் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.இந்த புகைப்படங்கள் தொழில்நுட்பங்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் சரிபார்க்கப்படும். உண்மையாகவே அந்த கழிப்பறைகள் இப்படி அசுத்தமாக தான் இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்யப்பட்ட பிறகு 1000 ரூபாய் சன்மானம் என்பது வழங்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் வரக்கூடிய சுங்கச்சாவடி கழிப்பறைகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.