வாழைத்தார் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி..!!
ஆடிப்பெருக்கை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.400 வரையிலும், பச்சைநாடன் வாழைத்தார் ஒன்று ரூ.350 வரையிலும், ரஸ்தாளி வாழைத்தார் ஒன்று ரூ.350 வரை யிலும், கற்பூரவள்ளி வாழைத்தார் ஒன்று ரூ.400 வரையிலும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5 வரையிலும், செவ்வாழை காய் ஒன்று ரூ.8 வரையிலும் ஏலம் போனது.
இந்தநிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று நடை பெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.550-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ஒன்று ரூ.450-க்கும். ரஸ்தாளி வாழைத்தார் ஒன்று ரூ.450-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.7-க்கும், செவ்வாழை ஒரு காய் ஒன்று ரூ.10-க்கும் ஏலம் போனது.
வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

