கோவை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் விவசாயிகள் மனு!!

 
tn

இந்தியா முழுவதும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் விவசாயிகள் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக பாஜக சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , கோவை வருகைபுரிந்த மத்திய வர்த்தகத்துறை அமைச்சர்  பியூஷ் கோயலிடம் வெங்காயத்திற்கு விதிக்கப்பட்ட 40% ஏற்றுமதி வரியை குறைக்க வேண்டும்.அதேபோல் தேங்காயின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.எனவே பாமாயிலுக்கு மாற்றாக இந்தியா முழுவதும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும்.மத்திய அரசு கொப்பரைத்தேங்காய் விலை ரூ.108.50 விலை நிர்ணயத்தும்,உரித்த தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தும் அது விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தென்னை விவசாயிகளின் நிலைமை கவலைக்குரியதாக உள்ளதென்ற கோரிக்கை மனுவை வைத்தனர்.

tb

வெங்காயப் பிரச்சனையை நிதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும்,தேங்காய் பிரச்சனையை உரிய துறை அதிகாரிகளோடு கலந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.

gn

இந்நிகழ்வில் உழவர் உழைப்பாளி கட்சித்தலைவர் திரு..செல்லமுத்து,கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தலைவர் திரு.ஈஸ்வரன்,விவசாயிகள் பாதுகாப்பு  சங்கத்தலைவர் திரு.மந்திராச்சலம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விவசாய பிரதிநிதிகளோடு பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K.நாகராஜ் உடனிருந்தார் என்று குறிப்பிட்டுள்ளது.