பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்காக விவசாய நிலங்கள் அழிப்பு- விவசாயிகள் புகார்

 
ச் ச்

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு விவசாய நிலங்களை அதிமுக - பா.ஜ.க நிர்வாகிகள் அழித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

எடப்பாடிக்கு 'செக்' வைத்த பாஜக..? பாஜக பொதுக்கூட்ட பேனரில் டிடிவி தினகரன்  படம்..!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில், 2 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு தேர்தல் களம் சூடு பிடித்து விட்டது. ஒவ்வொரு கட்சிகளும் தேர்தலுக்காக காய்களை நகர்த்தி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் பாஜக, அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உட்பட, தமிழக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மதுராந்தகத்தில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தில், மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதேபோன்று 10 ஏக்கர் பரப்பளவில், மூன்று ஹெலிகாப்டர்கள் தர இயங்குவதற்காக பிரம்மாண்டமான, எலிபேட் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கொடிகள் நடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை புறநகர் பகுதியான வண்டலூரில் இருந்து மேல்மருவத்தூர் வரை பல்வேறு இடங்களில் வரவேற்பு பேனர்கள் வைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இரண்டு லட்சம் கூட்டணி கட்சித் தொண்டர்கள் ? சுமார் 2 லட்சம் பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 3 மணி அளவில் இந்த கூட்டம் நடைபெறும் என்பதால், மேல் கூரை அமைக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்ளக்கூடிய பொதுக்கூட்டம் என்பதால், 7 அடுக்கு பாதுகாப்பு வரை போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை அருகே, தலைவர்கள் ஓய்வெடுக்கும் அறைகளும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கூட்டணி கட்சித் தலைவர்களில் தொடங்கி, பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் தொண்டர்கள் வரை அனைவருக்கும் அனுமதி அட்டை வழங்கப்பட உள்ளது. முழுமையான பரிசோதனை செய்த பிறகு ஒவ்வொருவரும் பொதுக்கூட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், பாரிவேந்தர், கூட்டணி உறுதியாக்கினால் டிடிவி தினகரன், ஏ.சி.சண்முகம், ஜான்பாண்டியன், உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மதுராந்தகத்தில் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார் இந்த நிலையில் நெல் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்களை இரவோடு இரவாக அதிமுக மற்றும் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் அழித்து ஒரு லட்சம் பணம் வழங்கியதாக பாதிக்கப்பட்ட விவசாயி ஜானகிராமன் தெரிவித்துள்ளார். மேலும் காண்கிரேட் தரை அமைப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக அதிமுக, பா.ஜ.க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் ஒரே வேலை காண்கிரேட் தரை அமைத்தால் இனி நிரந்தரராக  விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் இதனால் இந்த போகம் விவசாயம் முழுமையாக நஷ்டமடைந்துள்ளதாக விவசாயி ஜானகிராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் வாசு கூறுகையில் , மதுராந்தகத்தில் பிரதமர் மோடி கலந்துக்கொள்ள இடத்தில் ஏற்கனவே பல்வேறு கட்சியினர் மாநாடு பொதுக்கூட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் இதுவரை யாரும் செய்யாத விவசாய நிலங்களை அழித்து பொதுக்கூட்ட மேடை அமைப்பது அதிகாரத்தின் உச்சம். இது கண்டனத்திற்குறியது என தெரிவித்துள்ளார். இதனால் விவசாய பயிர்களை பறிகொடுத்த ஜானகிராமன் ஒரு புறம் நஷ்டத்தில் இருக்க மறுபுறம் அச்சத்தில் இருப்பதாக தெரிவித்தார்.