எருது ஆட்டத்தை வேடிக்கை பார்க்க சென்ற விவசாயி மாடு முட்டி உயிரிழப்பு
மேட்டூர் அருகே புக்கம்பட்டி கிராமத்தில் நேற்று நடைபெற்ற எருது ஆட்டத்தை வேடிக்கை பார்த்த விவசாயி ராஜ்குமார் (58) என்பவர் காளை மாடு முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே புக்கம்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற எருது விடும் ஆட்டத்தில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட காளை மாடுகள் அழைத்துவரப்பட்டதுஇதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடு பிடி இளைஞர்களும், சுமார் 2,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேடிக்கை பார்ப்பதற்காக வந்திருந்தனர். இந்த நிலையில் காளைகளை கயிற்றால் கட்டி கோவிலை சுற்றி அழைத்து வந்தனர். அப்பொழுது கூட்டம் அதிகமாக இருந்ததால் அச்சமடைந்த காளைகள் இளைஞர்களை பந்தாடி விட்டு கூட்டத்தை நோக்கி பாய்ந்தது. அப்பொழுது எதிரே இருந்த விவசாயி ராஜ்குமார் (58) என்பவரை முட்டியதில் அவர் பலத்த காயமடைந்தார் அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது இன்று சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் உயிரிழந்தார் இதனைத் தொடர்ந்து காயம் அடைந்த மேலும் இருவர் சேலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


