3 மணி நேரமாக டாக்டர் இல்ல... பாம்பு கடித்த விவசாயி பரிதாப பலி

 
ச் ச்

வேப்பூர் அருகே மங்களூர் கிராமத்தில் பாம்பு கடித்தவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் இன்று வயலில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது விஷ பாம்பு கடித்துள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை அதே கிராமத்தில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால்  சிகிச்சை அளிக்காமல் சுமார் 3 மணி நேரம் தாமதிக்க வைத்துள்ளனர். இதனால் செந்தில் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கக்கூட மருத்துவர்கள் இல்லாததால் செந்தில்குமார் உயிரிழந்ததாக கூறி  மருத்துவமனையை முற்றுகையிட்டும் சாலை மறியலில் ஈடுபட்டும் மருத்துவமனையின் கதவை சாத்தியும் கடும் வாக்குவாதத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.