பரனூர் சுங்கசாவடியில் கட்டணம் உயர்வு
பரனூர் சுங்கசாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்ட கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 73 சுங்கசாவடிகள் ஒன்றிய நெடுஞ்சாலை கட்டுபட்டில் இயங்கிய வருகின்றது இந்த 73 சுங்கசாவடியில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி கட்டணம் உயர்த்தப்பட்டது ஆனால் மீண்டும் மே மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்ததுள்ளது. ஏற்கனவே பெட்ரோல் டீசல் மற்றும் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்ட்டுள்ள நிலையில் சுங்க கட்டணம் விலை உயர்வு மீண்டும் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுங்க கட்டணம் உயர்த்துவதில் கவனம் செலுத்தும் ஒன்றிய நெடுஞ்சாலை ஆணையம் சாலைகளை முறையாக பராமரிப்பதில்லை, மின் விளக்குகள் முறையாக எரிவதில்லை மேலும் அத்தியாவச பொருட்களான காய்கறி, பால், மளிகை பொருட்கள் விலை உயர அதிக வாய்ப்பு உள்ளது எனவே சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்
செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் கட்டணம் உயர்வு விபரங்கள்
வேன்க்கு மாத கட்டணம் 4010 ரூபாயில் இருந்து 4015 ரூபாயாக உயர்வு
பேருந்துக்கு மாத கட்டணம் 8405 ரூபாயில் இருந்து 8410 ரூபாயாக உயர்வு
கனரக வாகங்களுக்கு Return 720 ரூபாயில் இருந்து 725 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

