'மனிதம் காத்து மகிழ்வோம்' - ரஜினிக்கு பாராட்டு விழா நடத்தும் ரசிகர்கள்!

 
rajini

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு பாராட்டு விழா 'மனிதம் காத்து மகிழ்வோம்' என்ற தலைப்பில் வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

Image

நடிகர் ரஜினிகாந்திற்க்கு அவருடைய ரசிகர்கள் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு அதற்கான விழாவை வரும் மார்ச் 26-ம் தேதி சென்னை  நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்த உள்ளனர். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு பாராட்டு மற்றும் நலிந்த ரஜினி ரசிகர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.  இதற்கான நிகழ்ச்சியை வேலூர் ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர் சோளிங்கர் ரவி நடத்துகிறார்.  இவர் ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பிற்கு முன்பு சோளிங்கரில் மாபெரும் மாநாடு ஒன்றை நடத்தியிருந்தார். அதிலும் ரஜினி ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியிருந்தார். 

இந்த நிலையில் தற்போது நந்தனத்தில் 'மனிதம் காத்து மகிழ்வோம்' என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்துகிறார். இதற்கான தலைப்பை நடிகர் லாரன்ஸ் வழங்கியதுடன் அந்த தலைப்பை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். அவரோடு சிவகார்த்திகேயன், அனிருத், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ஆகியோர் தலைப்பை வெளியிட்டனர். 26-ம் தேதி நடைபெறும் அந்த விழாவில் சினிமா துறையில் இருந்து சில பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.