ரசிகர்கள் ஷாக்..!! இன்று பாலையா படம் வெளியாகாது - அதிகாரபூர்வ அறிவிப்பு..!

 
Q Q

போயபட்டி ஸ்ரீனு எழுதி இயக்கியுள்ள புதிய படம் 'அகண்டா-2'. பால கிருஷ்ணா (பாலையா) கதாநாயகனாக நடித்துள்ளார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி, ஹர்ஷாலி மல்ஹோத்ரா, கபிர் துஹார் சிங் உள்பட பலர் நடித்துள்ளனர்.

பாலகிருஷ்ணா. அவரது மிரட்டல் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த அகண்டா படத்தின் அடுத்த பாகமான அகண்டா-2 இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் இன்று படம் வெளியாகாது என படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

படத்தின் புரமோஷனுக்காக நடிகர் பாலகிருஷ்ணா நேற்று (டிச.4) சென்னை வந்து செய்தியாளர்களை சந்தித்தார். இன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று இரவே ப்ரீமியர் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக படக்குழு அறிவித்தது.

இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தவிர்க்க முடியாத காரணத்தால் திட்டமிட்டப்படி ‘அகண்டா 2’ திரைப்படம் வெளியாகாது என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்களுக்கு வலி மிகுந்த தருணம்.

படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு எப்படியான ஏமாற்றத்தை கொடுக்கும் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. பிரச்சினையை சரி செய்ய அயராது உழைத்து வருகிறோம். தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம். விரைவில் பாசிட்டிவான செய்தி வெளியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.