ரசிகர்கள் அதிர்ச்சி..! பிரபல திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள்..!

 
1

சினிமா தியேட்டருக்கு வந்தால், டிக்கெட் எடுக்கும் விலையை விட ஜாஸ்தி அங்கு விற்பனை செய்யப்படும் ஸ்னாக்ஸ் வாங்குவது தான். வெளியில் ரூ.10 விற்கப்படும் பாப் கான் திரையரங்குகளில் ரூ.50 ரூபாய்க்கு விருகப்படுகிறது. அதே போல் வெளியில் கிடைக்கும் விலையை விட 2 மடங்கு கூடுதலாகவே விற்கப்படுகிறது. 


இந்நிலையில் சென்னையில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி உள்ளனர். அப்போது காலாவதியான பொருட்கள் இருப்பது கண்டுபிக்கப்பட்ட நிலையில்,  கேண்டீனின் உரிமத்தை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். 

இதை தொடர்ந்து, சென்னை முழுவதும் திரையரங்குகளில் சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.