ரசிகர்கள் ஷாக்..! 'ஜனநாயகன்' சிறப்பு காட்சி ரத்து..!!
Jul 23, 2026, 05:15 IST1784763921000
புதுச்சேரியில் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் காலை 7 மணி சிறப்புக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் மொத்தம் 13 திரையரங்குகளில் 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் 3 திரையரங்குகளுக்கு மட்டும் சிறப்புக் காட்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், பொதுமக்களுக்கு போதுமான அளவில் டிக்கெட் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டதால், சிறப்புக் காட்சியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காலை 10 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

