ரசிகர்கள் அதிர்ச்சி..! பிரபல நடிகை ஹன்சிகா மீது வழக்குப் பதிவு..!

 
1
10 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.கடந்த 2022ல் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானியின் மனைவி முஸ்கான் நான்சி ஜேம்ஸ் என்பவர் ஹன்சிகா மற்றும் அவரது அம்மா மோனா மோத்வானி ஆகியோருடன் தனது கணவரும் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தியதாக தற்போது மும்பை அம்போலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து கிட்டத்தட்ட நான்கு பிரிவுகளில் கீழ் ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020ல் பிரசாந்த்-முஸ்கான் திருமணம் நடைபெற்றது. அதே சமயம் 2022லேயே இந்த குடும்ப டார்ச்சர் காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார் முஸ்கான் நான்சி ஜேம்ஸ். இந்த நிலையில் தான் தற்போது தனது கணவரின் குடும்பத்திற்கு எதிராக இப்படி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இடையில் தனது கணவருடன் முஸ்கான் சமரசமாக செல்ல விரும்பி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதற்கு ஹன்சிகா மற்றும் அவரது அம்மா இருவரும் குறுக்கீடு செய்து முட்டுக்கட்டை போட்டதாகவும் அதன் விளைவாகவே இப்படி ஒரு புகாரை முஸ்கான் அளித்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.