ரசிகர்கள் ஷாக்..! துருந்தர் படத்தை வெளியிட 6 அரபு நாடுகள் தடை..!
Dec 13, 2025, 05:25 IST1765583720000
துருந்தர் படத்தை தங்கள் நாட்டில் வெளியிட 6 அரபு நாடுகள் தடை விதித்துள்ளன. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா ஆகிய 6 அரபு நாடுகளில் ரன்வீர் சிங்கின் துருந்தர் படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. துருந்தர் படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அரபு நாடுகள் படத்தை வெளியிட தடை விதித்துள்ளன.
பாகிஸ் தான் குறித்து நடிகர் ரன்வீர் சிங் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த கருத்துக்கு அரசு நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் காரணமாகவே துருந்தர் படத்திற்கு தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ரன்வீர் சிங் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


