ரசிகர்கள் ஷாக்..!! தங்கம் வென்ற நீரஜ் யாதவ் தற்கொலை..!!

 
Q

42 வயதான இந்திய பாரா இந்திய வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 3 முறை இந்தியாவுக்காக தங்க பதக்கங்களை வென்றுள்ளார். .

ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 3 முறை தங்க பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் (42), டெல்லியில் உள்ள தனது வீட்டில் நேற்று (அக்.27) தற்கொலை செய்துகொண்டார்.

ஊக்கமருந்து விவகாரத்தில் விதிக்கப்பட்ட தடை காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், அவரது மறைவை இந்திய பாரா தடகள தலைமை பயிற்சியாளர் எஸ்.சத்யநாராயணா உறுதிப்படுத்தியுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீரஜ் யாதவ், பாரா ஈட்டி எறிதல் போட்டியில் எஃப்55 (F55) பிரிவில் பங்கேற்று வந்தார். இந்த மாத தொடக்கத்தில் ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் அவர் பங்கேற்க முடியவில்லை. ஊக்கமருந்து தொடர்பான தடையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், நீரஜ் யாதவின் மரணத்துக்கான என்ன காரணம் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இது குறித்து பேசிய இந்திய பாரா தடகள அணியின் தலைமைப் பயிற்சியாளர் சத்யநாராயணா மேலும் கூறுகையில், "நீரஜ் தற்கொலை செய்துகொண்டார். இப்படி ஒரு சம்பவம் நடந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஒரு விளையாட்டு வீரர் வெற்றி, தோல்வி என இரண்டையும் சமமாக எதிர்கொள்ள வேண்டும். அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை" என்றார்.