புலம்பும் ரசிகர்கள்..! கூலி படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை ரூ.2000?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று கேரளாவில் முன்பதிவு தொடங்கிய ஒரே மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு, கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரா: கேரளாவுக்கு அடுத்தபடியாக இன்று இந்த மாநிலங்களிலும் முன்பதிவு தொடங்கியுள்ளது.
பெங்களூருவில் உள்ள தனி திரையரங்குகளில் 'கூலி' படத்தின் முதல் நாள், முதல் காட்சிக்கான டிக்கெட் விலை ரூ.500 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.500 முதல் ரூ.1,000 வரை விற்பனையாகிறது. இந்த அதிகபட்ச விலை நிர்ணயம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்குத் தொடங்க இருக்கும் நிலையில், மற்ற மாநிலங்களில் காலை 6:30 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படவுள்ளது.

