"ஆன்லைன் மூலம் பேன்சி எண்"- தமிழக அரசு அறிவிப்பு

 
s

தமிழகத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல் வாகன பேன்சி நம்பர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் இரண்டு சக்கரம், நான்கு சக்கரம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டண உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தி அமைக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் 2 ஆயிரம் ரூபாய் முதல் 8 லட்சம் வரையில் கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்து அரசு அறிவித்தது. சொகுசு எண்களுக்கு ரூ.8 லட்சம் வரை புதிய கட்டணத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில் தமிழகத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல் வாகன பேன்சி நம்பர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டண விகிதபடி பயனாளிகள் நேரடியாக ஆன்லைன் மூலம் பேன்சி எண் பெறலாம். விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து ஆன்லைனில் பேன்சி எண் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.