பிரபல "வில்லேஜ் குக்கிங் சேனல்" தாத்தா மருத்துவமனையில் அனுமதி!

 
Village cooking channel
youtube தளத்தில் மிகப் பிரபலமான சமையல் குறித்து விளக்கங்களை தமிழில் தரும் சேனலாக விளங்குகிறது "வில்லேஜ் குக்கிங் சேனல்".
இதில் பெரியவர் பெரிய தம்பிக்கு அவர் சமைப்பதை விட அவரின் மாடுலேஷன்க்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
அவரது பேரன் மற்றும் குழுவினருடன் அவர் நடத்தி வரும் இந்த சேனல் மிகக் குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலம் அடைந்தது.
ராகுல் காந்தி தமிழகத்தில் நடந்த பாதயாத்திரையின் போது இவர்கள் குழுவினருடன் கலந்து கொண்ட வீடியோவை வெளியிட்டனர்.
Village cooking
அது மட்டுமல்லாது விக்ரம் திரைப்படத்தில் இவர்கள் குழுவினருடன் சமையல் செய்வது போல் நடித்திருந்தனர்.
இந்நிலையில் பெரியவர் பெரியதம்பியின் பேரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்த ஒரு பதிவில், "தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!" என்று பதிவிட்டிருந்தார்.