கடலூரில் களமிறங்கும் பிரபல இயக்குனர்... வெளியான பாமக பட்டியல்..!

 
1

தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை கூட்டணி அமைத்தும், பாஜகவும் கூட்டணி அமைத்தும் மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுகின்றன.

அந்த வகையில், பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாமக போட்டியிடும் 9 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி,

திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா

அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு

ஆரணி - முனைவர் கணேஷ் குமார்

கடலூர் - தங்கர் பச்சான் (திரைப்பட இயக்குநர்)

மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ்

தருமபுரி - செளமியா அன்புமணி ராமதாஸ்

சேலம் - ந.அண்ணாதுரை

விழுப்புரம் - முரளி சங்கர்

பாமக தலைவர் அன்புமணியின் மனைவி செளமியா நேரடியாக களமிறங்குவதால் தருமபுரி தொகுதி மீண்டும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. 

மேலும், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பற்றிய விவரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.