பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்!!

 
tt

மைக்கேல் மதன காமராஜன் 1990இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஊர்வசி, குஷ்பூ, நாகேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

tt

முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான இதில் கமல்ஹாசன் நான்கு வேடங்களில்நடித்திருப்பது இப்படத்தின் சிறப்பு.

இந்நிலையில் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் வரது குட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்த கிரேஸி கிரியேஷன்ஸின் குள்ள  கோபி என்ற ஸ்ரீ கோபிநாத ராவ் நேற்று  மாலை 04.30 மணியளவில் உயிரிழந்தார். உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று  திருவான்மியூர் காமராஜ் நகர் 8/1 8வது கிழக்கு அவரது இல்லத்தில் நடைபெற்றது.  நடிகர் ஸ்ரீ கோபிநாத ராவ் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.