குடும்ப பிரச்சனை- உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துகொண்ட இளைஞர்
குடும்பத் தகராறு காரணமாக வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மொறப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் என்பவரின் மகன் சரத்குமார் வயது (22). அடிக்கடி இவர்கள் குடும்பத்தில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை அவரது தந்தை ரத்தினம் மற்றும் சாந்தகுமாருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு வாய் தகராறாக இருந்து மாறியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து குடும்பத்திலேயே பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் சாந்தகுமார் மன உளைச்சலியிலும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென நேற்று மாலை பெட்ரோல் ஊற்றி தனது உடலில் தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த சாந்தகுமாரை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சுக்காக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சாந்தகுமார் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.