பொய் விளம்பரம்... மாட்டிக்கொண்ட Swiggy மற்றும் பிரபல உணவகம்! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி!

 
Q

வழக்கறிஞர் பிரவீன் குமார் சிங் என்பவர் ஏப்ரல் 7, 2024 அன்று 14 நபர்களுக்காக Swiggy Dineout செயலி மூலம் 'திமிஸ் பார்பிக்யூ ஹவுஸ்' உணவகத்தில் மேஜை பதிவு செய்திருந்தார். Swiggy தளத்தில் "இரண்டு நபர்களுக்கான கட்டணம்" (Cost for two) ₹1,500 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்படி ஒரு நபருக்கான கட்டணம் ₹750 ஆகும்.

ஆனால் உணவகத்தில் ஒரு நபருக்கான சைவத உணவிற்கு ₹1,050 மற்றும் அசைவ உணவிற்கு ₹1,100 எனக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது Swiggy தளத்தில் காண்பிக்கப்பட்ட தொகையை விட 40% முதல் 47% வரை அதிகம் ஆகும்.

Swiggy தளத்தில் குறிப்பிடப்பட்ட தொகை ஒரு உத்தேசமானத் தொகை (Estimate) எனக் குறிப்பிடப்படவில்லை.

துல்லியமான விலைப் பட்டியலை அறிந்துகொள்ள வாய்ப்பு இருந்தும், Swiggy நிறுவனம் தவறான குறைந்த விலையைத் தொடர்ந்து காண்பித்தது சேவை குறைபாடு மற்றும் நேர்மையற்ற வர்த்தக நடைமுறையாகும்.

"தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79-ன் கீழ் இடைநிலையாளர் (Intermediary) என்று கூறி Swiggy தன் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது. நியாயமான சரிபார்ப்பு முறையை பின்பற்றியதற்கான எந்த ஆதாரத்தையும் நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை" என ஆணையம் தெரிவித்தது.

மேலும், மெனுவில் குறிப்பிடாமல் பானங்களுக்குச் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட 10% சேவைக் கட்டணமும் சேவைக் குறைபாடாகக் கருதப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, Swiggy மற்றும் உணவகம் இரண்டும் சேர்ந்து நஷ்டஈட்டுத் தொகையான ₹1 லட்சத்தை நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் 12% வட்டியுடன் அத்தொகையைச் செலுத்த வேண்டி வரும் என்றும் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.