புதுச்சேரியில் போலி மருந்து விவகாரம்- 13 வளாகங்களுக்கு சீல்
புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் 13 வளாகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன என்று அரசு சுகாதாரச் செயலாளர் சௌத்ரி முகமதுயாசின் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், புதுச்சேரி, மருந்து கட்டுப்பாட்டுத் துறை கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 8 வரை மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 மற்றும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதிகள், 1945 ஆகியவற்றின் அதிகாரத்தின் கீழ், மருந்து ஆய்வாளரால் சீல் வைக்கப்பட்டு பறிமுதல் நடவடிக்கை எடுத்துள்ளது. மருந்துப் பொருட்களின் விற்பனை, சேமிப்பு மற்றும் விநியோகம் தொடர்பான சட்டப்பூர்வ விதிகளின் மீறல்கள் தொடர்பாக நம்பகமான தகவல்கள் மற்றும் வழக்கமான கண்காணிப்பைத் தொடர்ந்தது. அதையடுத்து6 உரிமம் பெற்ற மற்றும் 7உரிமம் பெறாத வளாகங்கள் என மொத்தம் 13 வளாகங்கள் சீல் வைக்கப்பட்டன. இங்கு ஆய்வு செய்தபோது, செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் மருந்துகளை சேமித்து வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல், காலாவதியான அல்லது போலி மருந்து, மூலப்பொருட்கள், பேக்கிங் பொருட்கள், பயன்பாடுகள் போன்ற முறைகேடுகள் காணப்பட்டன.
உரிமம் பெற்ற வளாகங்களில் திருபுவனைபாளையத்தில் அமைந்துள்ள லார்வன் பார்மாசூட்டிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் , வில்லியனூர் பாகூர் மெயின் ரோடு உருவையாறில் அமைந்துள்ள . ஸ்ரீ அம்மன் பார்மா, தருமபுரி உழவர்கரை நகராட்சியில் தனகோடி நகரில் ஓம்சக்தி தெருவில் மீனாட்சி பார்மா, புதுச்சேரி, அபிஷேகபாக்கம், சிங்கிரிகுடி சாலை நியூ ஜெர்சி லைஃப் கேர் பார்மா
செட்டித்தெரு பார்ம் ஹவுஸ் மற்றும் செட்டித்தெரு ஸ்ரீசன் பார்மா ஆகியவற்றில் இங்கு மருந்து பறிமுதல் செய்யப்பட்டு, சீல் வைக்கப்பட்டு, உரிமம் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் உரிமம் பெறாத வளாகங்களில் மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழிற்பேட்டையில் அம்பாள் கோல்டன் காப்ஸ்யூல்கள், அதேபகுதியிலுள்ள கோல்டன் காப்ஸ்யூல்கள், அதேபகுதியில் உள்ள பெயர் இல்லாத 2 கிடங்குகள், வழுதாவூர் சாலை குரும்பாபேட்டில் பெயரில்லாத கிடங்கு, பூர்ணாங்குப்பம் மார்க் கார்டனில் பெயரில்லாத கிடங்கு, தவளக்குப்பம் ரோகிணி நகர் மருதமலை மருத்துவமனை தெருவில் பெயரிடப்படாத கிடங்கு ஆகியவற்றில் மருந்து பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது.


