#BJP தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல்?
Updated: Mar 18, 2024, 21:46 IST1710778615978
சென்னை: வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினருடன் தொகுதி உடன்பாடுகள் ஏற்பட்டு அவர்களுக்கான தொகுதிகளும் இன்று அறிவிக்கப்பட்டன.
இன்று ஆறாவது முறையாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகம் வந்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அங்கு திரளாக திரண்டு இருந்த தொண்டர்கள் மற்றும் மக்களின் அன்பான வரவேற்பினை ஏற்றுக்கொண்டார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக கூட்டணிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட பாமக அவர்களின் உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டத்திற்கு பிறகு பாஜகவுடன் கூட்டணி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் பகிரப்பட்டன..
இந்த பாஜக வேட்பாளர் பட்டியல் பற்றி தமிழக பாஜகவிளக்கம் அளித்துள்ளது.
அவர்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில், இன்று சமூக வலைதளங்களில் "பாஜக அறிவிப்பு போல வந்துள்ள இந்த செய்தி போலியானது" என்று விளக்கமளித்துள்ளார்.
பாஜக அறிவிப்பு போல வந்துள்ள இந்த செய்தி போலியானது..#FAKE pic.twitter.com/NzvHz2DCyF
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 18, 2024