கள்ளச்சாராய கடத்தல் - 6 புதிய சோதனை சாவடிகள்

 
dgp

கள்ளச்சாராய கடத்தல் விவகாரத்தில்  கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.  

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட நிலையில்  எக்கியார் குப்பம் மீனவர்கள்  கள்ளச்சாராயம் குடித்ததில் 7 பேர் பலியாகினர். இதையடுத்து விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கர் என்பவர் பலியாகியுள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக  உயர்ந்துள்ளது.  இந்த சூழலில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளசாராயம் குடித்து  4  பேர்  உயிரிழந்துள்ள நிலையில் இதுதொடர்பாக 10க்கும்  மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு

இதனிடையே கள்ளசாராயம் விற்பனை தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் வேட்டை நடத்தவும் , வனப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் மாவட்ட எஸ்.பி.களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  கள்ள சாராயத்திற்கான மூலப்பொருளான மெத்தனால் விற்பனையை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கள்ள சாராயத்தால் விழுப்புரம் செங்கல்பட்டில் 12 பேர் உயிரிழந்த நிலையில் டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Marakanam 3 People Died After Drinking Fake Liquor Two Police Inspectors  Suspended | கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பு: காவல் ஆய்வாளர்கள் 2  பேர் சஸ்பெண்ட்

இந்நிலையில் கள்ள சாராய கடத்தலை தடுக்க புதுச்சேரி தமிழ்நாடு இடையே 6 புதிய சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மரக்காணம் கள்ளசாராய வழக்கில் தலைமுறைவாக உள்ள 4 பேரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா தலைமையில் மூன்று டிஎஸ்பிகள் 6 காவல் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு கலப்படம் மதுவால் 4 பேர் உயிரிழந்த நிலையில் குற்றவாளிகளைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.