திமுக ஆட்சி மக்களின் உயிரைப் பறிக்கும் ஆட்சியாக விளங்குகிறது - ஓபிஎஸ்

 
ops

தி.மு.க. ஆட்சி மக்களின் உயிரைப் பறிக்கும் ஆட்சியாக விளங்குகிறது என்று ஓபிஎஸ் சாடியுள்ளார். 

Death

இதுக்குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச் சாராயம் குடித்து ஆறு பேர் உயிரிழந்த நிலையில், எரிசாராயம் குடித்து செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பெருக்கரணை கிராமத்தைச் சேர்ந்த திருமதி வசந்தா, திரு. சின்னதம்பி; மற்றும் பேரம்பாக்கம் கிராமத்தில் பணிபுரிந்து வந்த திரு. வள்ளியப்பன் மற்றும் அவரது மனைவி திருமதி சந்திரா ஆகியோர் எரிசாராயம் குடித்து உயிரிழந்துள்ளதாக செய்தி வந்துள்ளது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சி மக்களின் உயிரைப் பறிக்கும் ஆட்சியாக விளங்குகிறது. சட்ட விரோதச் செயல்களில் தி.மு.க.வினரின் ஈடுபாடு, காவல் துறையினரின்  அலட்சியப் போக்கு ஆகியவை தான் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம். இதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்  கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.