மரக்காணத்தில் 8 பேர் பலி ; செங்கல்பட்டிலும் கள்ளசாராயத்தால் 4 பேர் உயிரிழப்பு!!

 
Death

 மரக்காணத்தில் விஷசாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இதை எக்கியார் குப்பம் மீனவர்கள் அருந்தியதாக தெரிகிறது. இதனால் ஆபத்தான முறையில் அவர்கள் மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர். இதை கண்ட  அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை ஆகியவற்றில் சேர்த்தனர்.  இதில் சிகிச்சை பலனின்றி ஏழு பேர் உயிரிழந்தனர்.  உயிரிழந்தவர்கள் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி,  செஞ்சி மஸ்தான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.  அத்துடன் இது தொடர்பாக சாராய வியாபாரிகள் மீது குண்டர்  தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

death

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் விஷசாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கர் என்பவர் பலியாகியுள்ளார். இந்த சூழலில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளசாராயம் குடித்து  நான்கு பேர்  உயிரிழந்துள்ளதாக வடக்கு மண்டல ஆணையர்  கண்ணன் தெரிவித்துள்ளார் . விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் காவல் ஆய்வாளர்கள் உதவி காவல் ஆய்வாளர்கள் என இந்த விவகாரம் தொடர்பாக ஏழு பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் 10க்கும்  மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.