கள்ளச்சாராயம் விவகாரம் - பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ஈபிஎஸ்

 
tn

கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து  நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி.

tn

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ள சாராயம் அருந்தியதில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இதுவரை 14 பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின்  குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ள நிலையில் , நேற்று பாதிக்கப்பட்டவர்களின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

ttn

இந்நிலையில் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோரிடம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் நலம் விசாரித்துள்ளார்.  14 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவோரிடம் எடப்பாடி பழனிசாமி நலம், விசாரித்ததுடன் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதலும் கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சி.வி .சண்முகம் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கள்ளச்சாராயம்,  போதை பொருட்கள் தமிழகத்தில் அதிகரித்து விட்டதாகவும்,  இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளது கவனிக்கத்தக்கது