டாக்டர் பட்டம் போலி! வடிவேலுவை ஏமாற்றிய கும்பல்! அண்ணா பல்கலை துணைவேந்தர் ஆவேசம்

 
v

தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னன் வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டதாக அண்மையில் போட்டோக்கள் வைரல் ஆகி வருகின்றன.  இந்த டாக்டர் பட்டம் போலியானது என்றும் போலி கும்பல் வடிவேலுவை ஏமாற்றி இருக்கிறது என்றும் அண்ணா பல்கலை துணை வேந்தர் ஆவேசப்பட்டு இருக்கிறார்.

 வடிவேலு மட்டும் அல்லாமல் இசையமைப்பாளர் தேவா, டான்ஸ் மாஸ்டர் சாண்டி, யூடியூப் பிரபலங்கள் கோபி ,சுதாகர் உள்ளிட்டோரும் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்திருக்கிறது.

va

நடிகர் வடிவேலுவுக்கு சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையத்தின் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருந்தது.   இந்த டாக்டர் பட்டம் அண்ணா பல்கலைக்கழகத்தின் அரங்கில் நடைபெற்றது.  ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த பட்டத்தை வழங்கினார்.  வடிவேலு மட்டும் அல்லாது இசையமைப்பாளர் தேவா ,டான்ஸ் மாஸ்டர் சாண்டி உள்ளிட்டோருக்கும்டாக்டர் பட்டம் வழங்கப்பட்டன.  இதனால் அண்ணாமலை பல்கலைக்கழகம் தான் இந்த விருது வழங்குகிறது என்று பரபரப்பு செய்தி பரவியது.   ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் இந்த பட்டத்தை வழங்கியதால் இந்த விருது  உண்மை என்று பலரும் நம்பினர்.  ஆனால் சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்கின்ற அமைப்பே உண்டு இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

அந்த மோசடி கும்பல் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர்  பட்டம் கொடுப்பதாக அழைப்பிதழ்களில் அச்சுட்டு உள்ளனர்.  அரசு நிகழ்ச்சிகளில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய முத்திரையை சட்ட விரோதமாக அந்த அழைப்பிதழில் அச்சிட்டு , அதுவும் ஓய்வு பெற்ற நீதிபதியை தற்போதைய நீதிபதி என்று குறிப்பிட்டும் அழைப்பிதழில் அச்சுட்டு உள்ளனர்.  இதனால் தங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகமே டாக்டர் பட்டம் வழங்குவதாக நினைத்த வடிவேலு, தேவா உள்ளிட்டவர்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். 

dr

 அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த  இந்த நிகழ்ச்சியில் தனியார் கோவில் நிர்வாகிகள், ரியல் எஸ்டேட் அதிகாரிகள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் என்று 40-க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டிருந்தனர் .  இசையமைப்பாளர் தேவா, நடிகர் கோகுல், டான்ஸ் மாஸ்டர் சாண்டி,  ஈரோடு மகேஷ், ஓய்வு பெற்ற நீதிபதி ஏராளமான வள்ளிநாயகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். டாக்டர் பட்டங்களை ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் வழங்கினார்.

 இந்த நிகழ்ச்சிக்கு வராத வடிவேலுவுக்கு அவரது வீட்டிற்கே சென்று டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது .  விருது கொடுத்த நபர்கள் தங்களை ரிசர்வ் வங்கி கவர்னருடன் நேரடி தொடர்பில் இருப்பவர்களாக சொல்லி வடிவேலுவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை கொடுத்திருக்கிறார்கள்.   தனக்கு போலியான டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது என்பதை தெரியாமல் எம்ஜிஆர் பாட்டை பாடிய வடிவேலுவும் மகிழ்ந்துள்ளார்.  

 அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் அரங்கில் அரசு முத்திரையுடன் இப்படி போலியான டாக்டர் பட்டம் வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ்,  நடிகர் வடிவேலுவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை நாங்கள் கொடுக்கவில்லை.  ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகத்தையும் அண்ணா பல்கலைக்கழகத்தையும் அந்த கும்பல் ஏமாற்றி இருக்கிறது.   அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவேசப்பட்டுள்ளார்.  இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.