திரிஷா விஜய், விஜய் செல்வம் போன்ற எழுத்தாளர்கள் பெயர்களில் போலி புத்தகங்கள்

 
s

 

கோவை பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு பதிப்பக பெயரில் உள்ள புத்தகங்களை ஆய்வு செய்த போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கோவையிலுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்கள் சிந்தை இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையின் வாயிலாக சான்றுகளுடன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பேரதிர்ச்சி தருகின்றன. ஏறத்தாழ 1,800 நூல்கள் ஒரே பதிப்பகத்தின் பெயரில் இடம் பெற்றிருப்பதாகவும், முந்நூறு பக்க நூல்களுக்கு 1,395 ரூபாய், 1,445 ரூபாய் என விலை குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரை எழுதியிருக்கிறார். 

Image

இந்நிலையில் கோவை பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு பதிப்பக பெயரில் உள்ள புத்தகங்களை ஆய்வு செய்த போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அகல்விளக்கு பதிப்பக புத்தகங்களில் பெரும்பாலும் கடந்த ஜூன் மாதம் தேதியிட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அகல்விளக்கு பதிப்பக புத்தகங்களில் இரண்டு மட்டும் கடந்த ஆண்டு செப். தேதியிட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.  திரிஷா விஜய், விஜய் செல்வம் போன்ற எழுத்தாளர்கள் பெயர்களில் போலி புத்தகங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.