‘ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை பெறாமல் இருப்பது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கு ஆபத்தானது’ – மு.க.ஸ்டாலின்

 

‘ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை பெறாமல் இருப்பது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கு ஆபத்தானது’   – மு.க.ஸ்டாலின்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீடு செய்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

‘ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை பெறாமல் இருப்பது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கு ஆபத்தானது’   – மு.க.ஸ்டாலின்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜிஎஸ்டி சட்டத் தால் ஏற்படும் வருவாய் இழப்பு ஐந்து வருடங்களுக்கு ஈடு செய்யப்படும் என்று மாநிலங்களுக்கு அளித்த உத்தரவாதத்தை மத்திய பாஜக அரசு காற்றில் பறக்க விட்டுள்ளது. வசூல் செய்யப்பட்ட 47 ஆயிரத்து 272 கோடி ரூபாயை வேறு செலவுகளுக்கு மத்திய அரசு பயன்படுத்தி விட்டது வேண்டுமானால் மாநிலங்கள் சந்தையில் கடன் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறிவிட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலேயே அமைச்சர் திரு. ஜெயக்குமார் வலுவாக எதிர்த்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று போராடி இருக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் மத்திய அரசின் முடிவு மாநில நிதி உரிமைகளுக்கு எதிரானது. வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்திட வேண்டும் என்று வலியுறுத்தவில்லை, அப்படி மாநில உரிமைக்காக கோரிக்கை வைக்க தைரியமும் அவருக்கு இல்லை.

தமிழ்நாட்டுக்கு 11 ஆயிரத்து 269 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை நிலுவையில் உள்ளது என்பதை கழக எம்பி வில்சன் மாநிலங்களவையில் பதிலாக பெற்றிருக்கிறார். தொகையை பெறுவதில் முதலமைச்சர் தோல்வி கண்டு நிற்பது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கு ஆபத்தானது. அக்டோபர் ஐந்தாம் தேதி நடக்கும் 42ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீடு செய்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மற்ற மாநிலங்களின் ஆதரவினையும் பெற முயற்சிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.