7 நாட்களுக்கு அதி தீவிர கனமழை எச்சரிக்கை- பேரிடர் மேலாண்மை ஆணையம் அலர்ட்

 
rain

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை அடுத்து, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA) அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உடனடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கூடுதல் தலைமை செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் / மாநில பேரிடர் நிவாரண ஆணையர் வெளியிட்டுள்ள கடிதத்தில் (கடித எண். SEOC/143/2026, நாள்: 14.10.2026) கூறியிருப்பதாவது:-

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் நாள்:14.10.2026 (1430 மணி) அன்று வெளியிட்ட புல்லட்டின் படி, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மழை எச்சரிக்கை விவரம்:-

Day 1 (14.10.2026): மிக கனமழை (120-200 மி.மீ): மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில். கனமழை (70-110 மி.மீ):* தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்.

Day 2 (15.10.2026): மிக கனமழை: நீலகிரி, கோவை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்ட மலைப்பகுதிகளில் (Ghat Areas).

Day 3 (16.10.2026):- கனமழை: மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்  மாவட்டங்கள்

Day 4 (17.10.2026): கனமழை - நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி.

Day 5 (18.10.2026): கனமழை நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்.

Day 6 (19.10.2026):கனமழை நீலகிரி, கோவை, மதுரை, சிவகங்கை.

Day 7 (20.10.2026): கனமழை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல்.

மிக கனமழை என்பது 120 மி.மீ. முதல் 200 மி.மீ. வரையிலும், கனமழை என்பது 70 மி.மீ. முதல் 110 மி.மீ. வரையிலும் பெய்யும் மழை ஆகும்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் அனைவரும் பேரிடர் கையாளுதல் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) பின்பற்றி, முழு மாவட்ட நிர்வாகத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கவும், அசம்பாவிதங்கள் ஏதேனும் நடந்தால் உடனடியாக இந்த அலுவலகத்திற்கு தெரிவிக்கவும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஏ.சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.