அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

 
college reopen

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்கள்

தமிழகத்தில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.  இதில் இளநிலை படிப்புகளுக்காக மொத்தம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்கள் காலியாக உள்ளன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப பதிவு கடந்த 8ம் தேதி தொடங்கியது. இதையடுத்து ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் இளநிலை படிப்புகளுக்காக விண்ணப்பித்து வந்தனர். நேற்று வரை  2 லட்சத்து 48 ஆயிரத்து 510 மாணவர்கள் விண்னப்பப் பதிவு செய்துள்ள நிலையில் அவர்களில்  1 லட்சத்து 94 ஆயிரத்து 104 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.. பி.காம் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்..

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய இருந்தது.  இந்நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் விண்ணப்பம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற மே 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு tngasa.in என்ற இணையதளம் மூலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.