பாலியல் புகாருக்குள்ளான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு

 
பிரஜ்வல் ரேவண்ணா

பாலியல் புகாருக்குள்ளான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வரும் திங்கட்கிழமை வரை போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரூம் கிளீனா இல்லை''.. நீதிபதி முன்பு கண்ணீர்விட்ட பிரஜ்வல் ரேவண்ணா.. எஸ்ஐடி  மீது பரபர புகார் | SIT room and Toilet is not clean prajwal Revanna tears  in court - Tamil Oneindia

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா கடந்த 1 ஆம் தேதி வெளிநாட்டில் இருந்து பெங்களூரு திரும்பிய நிலையில் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். 

கடந்த 4 ஆம் தேதி பிரஜ்வல் ரேவண்ணாவை காவல்துறையினர் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றும் அவரது அலுவலகத்திற்கு அழைத்து சென்றும் குற்றம் நடந்ததாக கூறப்படும் இடங்களில் கள விசாரணை நடத்தினர். இன்றுடன் அவருக்கு போலீஸ்காவல் நிறைவடைந்த நிலையில் அவரை பெங்களூரு நகரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீஸ் கவலை மேலும் 10 நாட்களுக்கு நீடித்து வழங்க காவல்துறை கோரிக்கை விடுத்தனர்.

பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி

பிரஜ்வல் ரேவண்ணாவை மேலும் 5 நாட்கள் அதாவது வரும் திங்கட்கிழமை 10ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதை அடுத்து காவல்துறையினர் மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணாவை சி ஐ டி அலுவலகத்திற்கு அழைத்து சென்று மீண்டும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.